——
டொயோட்டா தொழில்நுட்பக் கல்வித் திட்டம்-
ஸ்டார் கல்வி உதவித் தொகை திட்டம்:
டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் அறிமுகம்
———
- இத்துடன் இந்தியா முழுவதும் 66 கல்லூரிகளில் இத்திட்டத்தை
டொயோட்டா கிர்லோஸ்கர் செயல்படுத்துகிறது
ஜூன் 20-‘திறன்மிக்க இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஏற்கனவே இந்தியா முழுவதும் டொயோட்டா தொழில்நுட்பக் கல்வித் திட்டம் – தொழில்நுட்ப கல்வி மற்றும் அங்கீகாரத்திற்கான ஸ்டார் என்னும் உதவித்தொகை திட்டத்தை 65 கல்லூரிகளில் செயல்படுத்தி வருகிறது. தற்போது 66வதாக உத்தரப்பிரதேசம் பரேலி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இத்திட்டத்தை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதும் மற்றும் நிறுவனத்தின் தனித்துவமான பயிற்சித் திட்டமான டொயோட்டா தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தின் மூலம் அவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை பரேலி அரசு பாலிடெக்னிக் முதல்வர் நரேந்திர குமார், டொயோட்டா வர்த்தக பிரிவு இயக்குனர் சிவம் குப்தா மற்றும் இந்நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ. வர்மா துவக்கி வைத்தார்.
உள்ளூர் உற்பத்தி சூழலை ஆதரிப்பதோடு திறன் மேம்பாட்டின் மூலம் சமூகங்களை மேம்படுத்துவதற்காக டொயோட்டா தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் மற்றும் டொயோட்டா தொழில்நுட்பக் கல்வித் திட்டம் போன்ற முதன்மைத் திட்டங்களில் டொயோட்டா அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த திட்டங்கள் பொருளாதார ரீதியாக சவாலான பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சியை வழங்குவதில் கவனம் செலுத்தி, ‘திறன்மிக்க இந்தியா’ பணிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றன. டொயோட்டா தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் மாணவர் அகிலேஷ் நரசிம்மமூர்த்தி கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உலக திறன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் அவர் 2023-ம் ஆண்டு ஜூலை 29 மற்றும் 30-ந்தேதிகளில் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கைத் திட்டத்தின் 3வது ஆண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடிய பெருமையைப் பெற்றவர் ஆவார்.
டொயோட்டா தொழில்நுட்பக் கல்வித் திட்டம் என்பது ஒரு விரிவான, ஆண்டு முழுவதும் வேலை செய்யும் பயிற்சியை உள்ளடக்கியதாகும். மேலும் இது இறுதியாண்டு ஐடிஐ மற்றும் டிப்ளமோ மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி பயிற்சியாளர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் டொயோட்டா டீலர்ஷிப்களில் வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் இந்திய வாகனத் துறையின் தேவைகளுக்கு ஏற்ப மேம்பட்ட தொழில்நுட்பங்களின் தொழில்நுட்ப அறிவை வழங்கும வகையில் இதன் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்விக்கு உதவிடும் வகையில் டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்டார் கல்வி உதவித் தொகை திட்டத்தை அறிமுகம் செய்தது. டொயோட்டா தொழில்நுட்பக் கல்வித் திட்டம் இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று அதில் 70 சதவீதம் பேர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் அதன் டீலர்ஷிப்களில் பணியில் சேர்ந்துள்ளனர்.
திட்டத்தை துவக்கி வைத்து உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ. வர்மா பேசுகையில், போட்டி நிறைந்த தற்போதைய காலக்கட்டத்தில் இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து அவர்களை திறமைமிக்கவர்களாக மாற்றும் டொயோட்டா நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற திட்டங்கள், வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக சவாலான பின்னணியில் உள்ள மாணவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும். டொயோட்டா தொழில்நுட்பக் கல்வித் திட்டம்-ஸ்டார் கல்வி உதவித் தொகை திட்டம் ஆகியவை மாணவர்களுக்கு தொழில்சார்ந்த நடைமுறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய அறிந்து கொள்ள உதவுவதோடு அதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டிற்கும் பங்களிக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் நிர்வாகத் துறை துணைத் தலைவர் விக்ரம் குலாட்டி கூறுகையில், இளம் திறமையாளர்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்ப திறன்கள் மற்றும் அறிவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை நாங்கள் இந்த பயிற்சித் திட்டத்தின் மூலம் வழங்கி வருகிறோம். இது வாகனத் துறையில் திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் எங்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இது ‘திறன்மிக்க இந்தியா’ திட்டத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளது. ஸ்டார் திட்டம், டொயோட்டா தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாகும், தகுதியான மாணவர்களுக்கு, குறிப்பாக நிதி ரீதியாக சவால் நிறைந்த பின்னணியில் உள்ளவர்களுக்கு, உதவித்தொகைகளை வழங்குவதன் மூலமும், வாகனத் துறையில் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தேவையான திறன்கள் மற்றும் அறிவை அவர்களுக்கு வழங்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம், அவர்கள் தங்களின் திறமைகளை அறிந்துகொள்ள உதவுகிறோம். மேலும் எங்களின் திட்டங்கள் மூலம் வாகனத் துறை மற்றும் நமது தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கிறோம் என்று தெரிவித்தார்.
பரேலி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நரேந்திர குமார் பேசுகையில், இந்தக் கூட்டாண்மையானது நமது மாணவர்களின், குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியில் உள்ளவர்களின் திறமைகளை உயர்த்தும். பயிற்சி திட்டம் மற்றும் உதவித்தொகை ஆகியவை எங்கள் மாணவர்களுக்கு அவர்களின் தொழில் துறையில் விரும்பியதை அடையவும், வாகனத் துறை மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் உதவும். கோட்பாட்டு அறிவு மற்றும் நடைமுறை சார்ந்த வேலைப் பயிற்சி ஆகியவை, வாகனத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்கள் மாணவர்களை நன்கு தயார்படுத்தவும், கூடுதலாக, வழங்கப்படும் உதவித்தொகையானது அவர்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
டொயோட்டா வர்த்தக பிரிவு இயக்குனர் சிவம் குப்தா பேசுகையில், வாகனத் துறையில் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள், அதிகரித்து வரும் மோட்டார் மயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றுடன், மிகவும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, டொயோட்டா தொழில்நுட்பக் கல்வித் திட்டம் மாணவர்களுக்கு ஆட்டோமொபைல் அடிப்படைகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், டொயோட்டாவின் முக்கிய மதிப்புகள் மற்றும் அத்தியாவசிய மென்மையான திறன்களை உள்ளடக்கிய அதிநவீன பாடத்திட்டத்தை வழங்குகிறது. மேலும் அவர்களுக்கு வேலையில் பயிற்சி அளித்து அவர்களின் திறன் மேம்பாட்டை எளிதாக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விரிவான திட்டம் மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தையும் சமீபத்திய வாகனத் தொழில்நுட்பங்கள் குறித்து தெரிவிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் வேலைவாய்ப்பை கணிசமாக அதிகரிக்கிறது, இது இந்த பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.
டொயோட்டா நிறுவனம் அதன் டீலர்களுடன் இணைந்து, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மின் கற்றல் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும், என்ஜின்கள், டிரான்ஸ்மிஷன், பயிற்சி கருவிகள் மற்றும் ஆசிரியப் பயிற்சிகளை அதன் தனித்துவமான பயிற்சியாளர் மூலம் பயிற்சி அணுகுமுறையின் மூலம் வழங்குவதற்கும் ரூ.1.5 மில்லியன் முதலீடு செய்துள்ளது. கூடுதலாக ஸ்டார் கல்வி உதவித் தொகை திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. ஸ்டார் திட்டம் பொருளாதார ரீதியாக சவால்கள் நிறைந்த பின்னணியில் இருந்து தகுதியான மாணவர்களுக்கு தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர்கல்வியைத் தொடர உதவுகிறது. தகுதியுடைய மாணவர்களுக்கு, விடுதிக் கட்டணம், கல்விச் செலவுகள் மற்றும் குடும்ப ஆதரவுடன் ஆண்டுக்கு 51 ஆயிரம் ரூபாய் வரை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார், நாகாலாந்து, அசாம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் என 11 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள மாணவர்கள் பலன் பெற்று வருகிறார்கள்.
Overview of TKM
Equity participation | Toyota Motor Corporation (Japan) : 89%, Kirloskar Systems Limited (India) : 11% |
Number of employees | Approx. 6,000 |
Land area | Approx. 432 acres (approx.1,700,000 m2) |
Building area | 74,000 m2 |
Total Installed Production capacity | Up to 3,42,000 units |
Overview of TKM 1st Plant:
Established | October 1997 (start of production: December 1999) |
Location | Bidadi |
Products | Innova HyCross, Innova Crysta , Fortuner, Legender manufactured in India. |
Installed Production capacity | Up to 1,32,000 units |
Overview of TKM 2nd Plant:
Start of Production | December 2010 |
Location | On the site of Toyota Kirloskar Motor Private Limited, Bidadi |
Products | Camry Hybrid, Urban Cruiser Hyryder, Hilux |
Installed Production capacity | Up to 2,10,000 units |
*Other Toyota Models: Glanza, Rumion, Urban Cruiser Taisor
**Imported as CBU: Vellfire, LC 300