நிதியாண்டு 25 இல் தொழில்நுட்ப மற்றும் AI மாற்றி அமைக்கும் நவீனமாக்கல்களுக்கு மத்தியில் சென்னையில் உள்ள தொழில் வல்லுநர்களிடையே வேலைகளைத் தக்கவைத்துக்கொள்வதில் நம்பிக்கை குறைந்துள்ளதை கிரேட் லேர்னிங் காண்கிறது

  • சென்னையில் உள்ள 76% தொழில் வல்லுநர்கள்தங்கள் தொழில் வாழ்க்கையை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் அப்ஸ்கில்லிங் செய்வது அதி முக்கியமானது என்று நம்புகிறார்கள்
  • சென்னையில் உள்ள தொழில் வல்லுநர்களில் 60% மட்டுமே அடுத்த ஆண்டு முழுவதும் தங்கள் வேலையைத் தக்கவைத்துக் கொள்வதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்

சென்னை26 செப்டம்பர் 2024:உயர்கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சிக்கான முன்னணி உலகளாவிய எட்டெக் நிறுவனமான கிரேட் லேர்னிங், அவர்களின் ‘அப்ஸ்கில்லிங் ட்ரெண்ட்ஸ் அறிக்கை 2024- 25’ மூன்றாவது பதிப்பை வெளியிட்டுள்ளது.  இந்திய நிபுணர்களின் அப்ஸ்கில்லிங் விருப்பங்களை பாதிக்கும் முக்கிய போக்குகளைக் கண்டறிய முக்கிய துறைகளைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட நிபுணர்களுடன் ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்; வேலைகளை பாதிக்கும் முக்கிய போக்குகளைப் புரிந்துகொள்வதற்கும், இவற்றில் விளைவுக்கு முன்னால் முன்நிறுத்தி தங்களை தயார்படுத்துவதற்கும் தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் உதவுவதை இந்த அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது 

இந்த அறிக்கையின்படிசென்னையில் உள்ள தொழில் வல்லுநர்களில்73% பேர் தொழில்நுட்பம் மற்றும் AI ஆகியவற்றின் முன்னேற்றம் தங்களின் தற்போதைய பணிப்பொறுப்புகளைப் பாதிக்கிறது என்று தெரிவிக்கின்றனர், மேலும் நகரத்தில் உள்ள 76% தொழில் வல்லுநர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் அப்ஸ்கில்லிங் செய்வது முக்கியமானது என்று நம்புகிறார்கள்.  சென்னையில் உள்ள 67% தொழில் வல்லுநர்கள் நிதியாண்டு 24 இல் தங்கள் வேலையைத் தக்கவைத்துக் கொள்வதில் நம்பிக்கையுடன் இருந்தனர். தொழில்நுட்ப மற்றும் AI மாற்றி அமைக்கும் நவீனமாக்கல்களுக்கு மத்தியில் இந்த நம்பிக்கையானது நிதியாண்டு 25 க்கு 60% ஆகக் குறைந்துள்ளது . இதை நிவர்த்தி செய்ய, சென்னையில் உள்ள 87% தொழில் வல்லுநர்கள் 2024 ஆம் ஆண்டில் புதிய கடினமான திறன்களைப் பெறுவதற்கான சான்றிதழ் படிப்புகளைத் தொடர திட்டமிட்டுள்ளனர்.  நகரத்தில் உள்ள வல்லுநர்கள் பெற விரும்பும் சிறந்த திறன்கள் நிர்வாக மேலாண்மை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் AI/ML ஆகியவையாகும்.

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த கிரேட் லேர்னிங் இணை நிறுவனர்ஹரி கிருஷ்ணன் நாயர், “கடந்த ஆண்டு முதல்சவாலான பொருளாதார நிலைமைகள் மற்றும் நிலையற்ற உலக அரசியல் சூழ்நிலை ஆகியவை பல வணிகங்களுக்கு மூலதன அணுகல் மற்றும் லாபகரமான விரிவாக்கத்தைக் கடினமாக்கியுள்ளன. இந்த மாறிவரும் சூழலில் போட்டியிடும் திறனுடன் இருக்கதொடர்ந்து கற்றல் மற்றும் அப்ஸ்கில்லிங் ஆகியவை தகவமைப்புக்கும் வளர்ச்சிக்கும் முக்கியம் ஆகும். பணியமர்த்துபவர்களின் வளர்ந்து வரும் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய சிறப்புத் திறன்களைப் பெறுவதன் மூலம்இந்த மாற்றி அமைக்கும் நவீனமாக்கலைக் கடந்து செல்லதொழில் வல்லுநர்கள் ஒரு செயலூக்கமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது.திறன் வளர்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க முயற்சிகள் இந்த விழிப்புணர்வை மேலும் அதிகரித்துள்ளன. அப்ஸ்கில்லிங் ட்ரெண்ட்ஸ் அறிக்கை 2024-25 மூலம்மதிப்புமிக்க நுண்ணறிவுகளைக் கொண்ட கற்போர்தொழில் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உதவுவதும்நிதியாண்டு 25க்கு திறம்பட உத்திகளை உருவாக்க அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதும் எங்கள் நோக்கமாகும்.”

தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் சென்னை தொடர்ந்து உருவாகி வரும் வேளையில், இந்த போக்குகள் எதிர்கால பணியாளர்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அப்ஸ்கில்லிங்கில் தொழில் வல்லுநர்கள் கவனம் செலுத்துவதால், வரும் ஆண்டுகளில் புதுமை மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான முக்கிய மையமாக சென்னை மாற உள்ளது