Chennai 23 ஜூன் 2024: இந்தியாவின் மிகப்பெரிய கமர்ஷியல்வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், இன்று டாடா மோட்டார்ஸ் ஃப்ளீட் வெர்ஸ் எனும் டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல்வாகனங்களுக்கான விரிவான மற்றும் புதுமையான டிஜிட்டல் சந்தைக் களத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. புதிய வாகனக் கண்டுபிடிப்பு, கட்டமைப்பு, கையகப்படுத்தல், நிதியுதவியளித்தல் போன்ற அம்சங்களையும் வழங்கும் இந்த இயங்குதளம், பலவிதமான கூடுதல் சேவைகளையும் அம்சங்களையும் வழங்கி எதிர்காலத்திற்கு உகந்ததாய் விளங்குவதுடன், அனைத்து கமர்ஷியல்வாகனத் தேவைகளுக்கும் ஃப்ளீட் வெர்ஸை ஓர் ஒற்றை நிறுத்த டிஜிட்டல் இலக்காக மாற்றுகிறது.
ஐந்து முக்கிய தூண்களில் எழுப்பப்பட்ட ஃப்ளீட் வெர்ஸ் கமர்ஷியல் வாகன உரிமையுடைமையின் அனைத்து அம்சங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட சொற்பொருள் தேடல் அம்சங்களால் செறிவூட்டப்பட்ட ஸ்மார்ட் சர்ச் வெஹிக்கிள் டிஸ்கவரி, 900+ மாடல்களும் 3000+ வகைகளும் கொண்ட டாடா மோட்டார்ஸின் முழு அளவிலான கமர்ஷியல் வாகனங்களை பயனர்கள் ஆராய்வதற்கு வகை செய்கிறது. தயாரிப்பு கட்டமைப்பாளரில், பயனர்கள் தங்களது வணிகத் தேவைகள், பயன்பாடு மற்றும் மிகவும் பொருத்தமான வாகனப் பரிந்துரையைப் பெறுவதற்கான தெரிவுகள் ஆகியவற்றை உள்ளிடலாம். 3D விஷுவலைசர் வாகனத்தின் வெளிப்புறங்களையும் உட்புறங்களையும் யதார்த்தமான விவரங்களுடன் பார்க்கும் உள்ளார்ந்த அனுபவத்தை வழங்குகிறது. வாகன ஆன்லைன் ஃபைனான்ஸ் மூலம், ஃப்ளீட் வெர்ஸ் முக்கிய நிதியாளர்களுடன் இணைந்து விரைவான மற்றும் சுமூகமான நிதி சார்ந்த விண்ணப்பங்களையும் ஒப்புதல்களையும் வழங்குகிறது. இறுதியாக, வாகன ஆன்லைன் முன்பதிவு அம்சமானது, பயனர்கள் தங்களது விருப்ப வாகனங்களை ஒரு சில எளிய கிளிக்குகளில் முன்பதிவு செய்து, முன்னுரிமை சார்ந்து செயல்படுத்துவதற்கு உதவுவதன் மூலம், வாங்குதல் செயல்முறையை எளிதாக்குகிறது.
டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ், டிஜிட்டல் பிசினஸ் தலைவர் திரு. பாரத் பூஷன் ஃப்ளீட் வெர்ஸ் தளத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில், ”ஃப்ளீட் வெர்ஸை அறிமுகப்படுத்துவதன் மூலம், அனைத்தையும் உள்ளடக்கிய டிஜிட்டல் தளத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கமர்ஷியல்வாகனத் துறையில் ஒரு புதிய திறன் அளவீட்டைக் கட்டமைக்கிறோம். கமர்ஷியல்வாகனத்தை சொந்தமாய் வைத்திருக்கும் அனுபவத்தை, அது வேகமானது, புத்திசாலித்தனமானது, பாதுகாப்பானது, நம்பகமானது என்பதை உறுதிப்படுத்தி நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மதிப்புச் சங்கிலிகள் மூலம் டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்குமான வளர்ச்சியையும் வசதியையும் மேம்படுத்தி, புதுமை உருவாக்கத்திலும் செறிவான விதத்தில் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்வதிலும் நாங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த முன்முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த பெரும் மாற்றம் தரும் அனுபவத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த உற்சாகமடைவதுடன், புதிய அம்சங்களுடனும் திறன்களுடனும் தளத்தை தொடர்ந்து மேம்படுத்துவதையும் எதிர்நோக்கியுள்ளோம்.
ஃப்ளீட் வெர்ஸில் எல்லாப் பரிவர்த்தனைகளும், டாடா மோட்டார்ஸின் விரிவான பான்-இந்திய டீலர்ஷிப் நெட்வொர்க் மூலம் நேரடியாக டீலருக்கு பணம் செலுத்தும் சூழல் அமைப்பைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுகின்றன. டிஜிட்டல் பாலமாகச் செயல்படும் இந்தத் தளமானது விசாரணை
முதல் வாகன டெலிவரி வரையிலான செயல்முறைகளை ஒழுங்குபடுத்தி, டீலர்ஷிப்களையும் நிதியாளர்களையும் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இணைக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கும் டாடா அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களுக்கும் இடையே ஒரு வெளிப்படையான, உடனடியான, சௌகரியமான கொள்முதல் செயல்முறையை ஏதுவாக்குகிறது – இது ஓர் உண்மையான இருதரப்பு-வெற்றி சூழ்நிலை.